கோத்தா பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை – குமார வெல்கம

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

“கோத்தாபய ராஜபக்ச ஒரு அமெரிக்க குடிமகன். அவர், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்துப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த குமார வெல்கம, தாம் ஒரு குடும்பத்தை மையப்படுத்திய ஆட்சியை எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!