மாவீரர் தினத்தன்று புலிகளை நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது! – இராணுவப் பேச்சாளர்

மாவீரர் தினத்தன்று, வடக்கில் புலிகளை நினைவு கூர வேண்டாம் என்றும், உறவுகளை நினைவு கூரத் தடையில்லை எனவும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில், இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்த கருத்துகள் தொடர்பில், மேலதிக விளக்கம் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“யுத்தகாலத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர, வடக்கு வாழ். தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆனால், மாவீரர் தினம் என்ற பேரில் புலிகளை நினைவு கூருவதை அனுமதிக்க முடியாது என்பதே இராணுவத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறான அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!