பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்; தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விஜயராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் விவகாரம்,ஜனாதிபதி கொலை சதி குறித்து அரசாங்கம் மௌனத்தை கடைப்பிடிப்பது போன்ற விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எங்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர வேறு எதனையும் செய்யாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கொலை சதி முயற்சி குறித்து ஜனாதிபதி சிறிசேனவிற்கு பல விடயங்கள் தெரிந்திருக்கும் எனவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!