கேரள வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞனை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லையே: – கண்ணீர் விட்டு கதறிய நண்பர்

கேரள வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை என்று நண்பர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தின் போது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக மீட்பு படையினருடன் மீனவர்களும் இணைந்து மக்களைக் காப்பாற்றினார்.

கேரளாவின் செங்கனூர் அருகே பூந்துரா நகரைச் சேர்ந்தவர் ஜினீஷ் ஜிரோன் . 24 வயதான இவர் முதலில் வெளிநாட்டில் சென்று வேலை பார்த்து வந்ததாகவும், அதன் பின் கேரளா வந்து மீன்பிடி தொழில் செய்து வந்ததாகவும் கூறப்பட்டது. கேரளாவில் பெருமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்தபோது தனது சொந்த செலவில் இவர் படகு அமர்த்தி இவர் மற்றும் இவரது நண்பர்கள் குழு 600-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றியதாக கூறப்பட்ட நிலையில், இவர்களின் குழு 800-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதிலும் ஜினீஷ் ஜிரோன் தனி ஒருவனான 100-பேரைக் காப்பாற்றியுள்ளார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை செங்கனூர்அருகே பழைய உச்சகடா பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஜினீஷ் ஜிரோன் பரிதாபமாக உயிரிழந்தார். பலரின் உயிரைக் காப்பாற்றிய இவரின் இறப்பு செய்தி அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.மேலும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஜினீஷ் ஜிரோனின் நண்பர் சில தகவல்களை கூறியுள்ளார். அதில், நாங்கள் இருவரும் அனூர் சென்றோம்.

நான்தான் பைக்கை ஓட்டினேன். அப்போது பைக் மீது ஒரு டிரக் உரசியதால் நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தோம். அப்போது ஜினீஷ் மீது லாரி ஏறிச் சென்றது. இதனால் அவனின் இடுப்புப்பகுதியில் பலத்த காயமடைந்ததால், அவன் உயிருக்கு போராடினான். நானும் காயத்தால் அலறினேன்.

ஆனால், சாலையில் சென்ற மக்கள் எங்களைப் பார்த்தவாறு சென்றனர் உதவி செய்ய வரவில்லை. அனைவருக்கும் உதவி செய்வதற்கு விரும்பும் ஜினீஷ்க்கு யாரும் உதவி செய்யவில்லையே எனக்கு அழுகை வந்தது. அதன்பின் நீண்டநேரத்துக்கு பின் ஆம்புலன்ஸ் வந்தது. ஜினீஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானான் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!