உ.பி.யில் விமானப்படை விமானம் வயலில் விழுந்தது – விமானி உயிர்தப்பினார்

உத்தரப்பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் திடீர் கோளாறு காரணமாக அவசரமாக வயலில் தரையிரக்கப்பட்டது, அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.

உத்திரப்பிரதேச மாநிலம், பாக்பட் மாவட்டம் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் அவசரமாக வயல்வெளியில் தரையிரக்கப்பட்டதால் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமனாக விமானி உயிர் தப்பினார்.

இந்திய விமானப்படை தினம் வருகிற 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், காசியாபாத்தில் உள்ள ஹிண்டோன் விமானப்படை தளத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் சாகச நிகழ்சிக்கான சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டது.

ஆனால், நடுவானில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை அவசரமாக வயல்வெளியில் விமானி தரையிரக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!