ஞானசார தேரரின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறுவருட சிறைத்தண்டனையை நீக்குமாறு கோரி கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவே உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நலின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்தக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மூரடங்கிய நீதிபதி குழாமின் பெரும்பான்மை தீர்ப்பிற்கு அமைய அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றசாட்டின் குற்றவாளியான பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!