ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை! -மாவை எச்சரிக்கை

??????????????????????????????????????????????????????????
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட திர்மானத்திற்கு எதிராக ஜனாதிபதி உள்நாட்டிலேயே தீர்வு காணுவதாக குறிப்பிட்டுள்ளமை இந்த உலகத்தை ஏமாற்றுவதற்காகவே எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியும் நேற்று மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே ஜே வி பியினர் ஆயுதம் ஏந்தி அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு போராடிய காலத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் என்ற காரணத்தினால் அரசாங்கம் புறக்கணித்துள்ளது. தமிழ் அரசியற்கைதிகளை விசாரணை நடத்த ஒரு விசேட விசாரணைக் குழுவை அரசு இதுவரை நியமிக்கவில்லை. அவர்கள் எதற்காக போராடினார்கள் என்பதன் உன்மைகளை கண்டறிந்து அதற்கு தீர்வைக்காண முன்வரவில்லை.

10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்கைதிகளை வாட்டி வதைத்து அந்த இளைஞர்கள் தமது உயிர்களை பணயம் வைத்து சிறைக்குள்ளயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இந்த அரசு வைத்துள்ளது. இவற்றை நாங்கள் தீவிரமாக கண்டிக்கின்றோம். அதே நேரத்தில் இந்த சிறைக்கைதிகள் நிச்சயமாக மிகவிரைவில் விடுவிக்கப்படவேண்டும். அப்படி அவர்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில் நாங்கள் இவ்வாறாக கண்டண போராட்டங்களை கொழுப்பிலும் தொடர வேண்டியிருக்கும். அவ்வாறு போராடுவது மட்டுமல்ல சர்வதேச இராஜதந்திரிகளிடத்தில் ஜ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர்களிடத்தில் முறையிட வேண்டியிருக்கும்.

ஏற்கனவே பல நாட்டு தூதரகங்களில் இந்த விடயம் குறித்து நாங்கள் பேசியிருக்கின்றோம். கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் கைதிகளின் விடுதலை தொடர்பில் பொருத்தமான முடிவுகள் எடுப்போம் என்று வாக்குறுதி அழித்து ஜ.நாவில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. ஆனால் கடந்த 25 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெற்ற ஜ.நா பொது கூட்டத்திலே ஜனாதிபதி உள்நாட்டிலயே இந்தப்பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணவேண்டும் என்று கூறியிருப்பது இந்த பிரச்சனைகள் உள்நாட்டில் தீர்க்கப்படவில்லை என்பது நிருபிக்கின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் ஒரு போரை ஏற்படுத்திய காரணத்தினால் அதன் விளைவுகளால் இன்று சர்வதேசம் தலையிட்டிருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு ஜ.நாவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜ.நாவில் ஒப்புக் கொண்ட அந்த தீர்மானத்திற்கு எதிராக இன்று ஜனாதிபதி உள்நாட்டிலயே தீர்வு காணுவது என்று கூறுவது எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. எங்களை மட்டுமல்ல இந்த உலகத்தை ஏமற்றுவதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த ஆட்சிக்கு எதிராக ஜனாதிபதிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கையை சர்வதேச மட்டத்தில் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

3ஆண்டுகளுக்கு பின்னரும் ஜனாதிபதி தமிழ் மக்களுடைய போராட்டங்களுக்கும் கைதிகளுடைய போராட்டங்களுக்கு எங்களுடைய கட்சிகளுடைய வேண்டு கோள்களுக்கு செவிசாய்க்காமல் இருக்கின்றது. உடனடியாக விரைந்து தமிழ் மக்களின் பிரச்சானைகளுக்கு குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். புனர்வாழ்வு வழங்கி பொதுமன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

இன்று முல்லைத் தீவில் மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பல மாவட்டங்களில் இந்த போராட்டங்கள் தொடர்கின்றன. இதற்கு ஜனாதிபதி செவிசாய்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்.என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் இங்கு கூடியிக்கின்ற தமிழ்மக்கள் சார்பிலும் நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!