கொலரா நோயால் 49 பேர் பலி – சிம்பாப்வேயில் சம்பவம்

சிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோயின் தீவிரத்தினால் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, நோய் பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும், நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!