கூட்டணி அரசு குறித்து இதுவரை பேசவில்லை – மகிந்த

கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு- அபயராமயவில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“மக்களுக்கு உதவும் வகையில் நாடு நெருக்கடியில் சிக்குவதை தடுப்பதற்காக, நாங்கள் தலையிட வேண்டியிருக்கிறது.

எனினும், கூட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. அது ஒரு யோசனையாக மாத்திரமே உள்ளது.

இது நடக்குமா என்று எமக்குத் தெரியாது. இது நடப்பதற்கான சாத்தியம் மிகவும் மெல்லியதாகவே உள்ளது.

எவ்வாறாயினும், அந்தப் பக்கத்தில் இருந்து, யோசனை முன்வைக்கப்பட்டால், ஒரு கட்சி என்ற வகையில் எங்களால் முடிவு செய்ய முடியும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!