மரணமடைந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன்!

மஹாராஷ்டிராவில் இறந்த நண்பனின் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபூர்வா யாதவ் (20) என்ற இளம்பெண் Sarthak Jadhav என்ற இளைஞரை காதலித்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், Jadhav-ன் காதலை முறித்துக்கொண்டு அபூர்வா வேறு ஒரு நபரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜாதவ் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். நண்பனின் தற்கொலைக்கு காரணம் அபூர்வா மற்றும் அவருடைய காதலன் தான் என நினைத்த அமர் ஷிண்டே (21) நீண்ட நாட்களாகேவ நண்பனின் காதலியை பழிவாங்க துடித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடகாவில் தங்கி படித்து வந்த அபூர்வவை வீட்டில் யாரும் இல்லாத போது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய அபூர்வாவின் அம்மா, ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அபூர்வா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கழுத்தை அறுத்ததோடு மட்டுமின்றி அவருடைய உடலிலும் ஏராளமான இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், தற்போது குற்றவாளி அமர் ஷிண்டேவை கைது செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!