இந்தியத் தலைவர்களுடன் ரணில் இன்று முக்கிய பேச்சு – தமிழர் விவகாரமும் ஆராயப்படும்

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய அரசின் தலைவர்களுடன் தனித்தனியாக – முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளார்.

இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சிறிலங்கா அதிபர் சந்திக்கவுள்ளார்.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு இன்று பிற்பகல் ஹைதராபாத் ஹவுசில் இடம்பெறும்.

இதன்போது, இரண்டு நாடுகளின் பிரதமர்களும், வடக்கில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டங்களின் நிலை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்றும், நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் தமிழ்ப் பகுதிக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழர் விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சிறிலங்காவில் சீனாவின் பொருளாதாரத் தலையீடுகள் அதிகரித்து வரும் பின்னணியில், இந்திய –சிறிலங்கா உறவுகளின் முழுவரம்பு குறித்து கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!