பத்திரிகையாளர் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டார்- இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டது சவுதி

துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது.

துருக்கியில் உள்ள தூதரகத்தில் சவுதி அரேபியாவை சேர்ந்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற மோதலின் போது பத்திரிகையாளர் கொல்லபட்டார் எனசவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கசோஜிக்கு என்ன நடந்தது என தெரியாது என கடந்த இரண்டு வாரங்களாக தெரிவித்து வந்த சவுதி அரேபியா தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் சென்ற பத்திரிகையாளருக்கும் சவுதி அதிகாரிகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல் இழுபறி நிலையின் போது அவர் கொல்லப்பட்டார் என சவுதிஅரேபியா தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளருக்கும் சவுதி அதிகாரிகளிற்கும் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியது என சவுதிஅரேபியாவி;ன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற துன்பகரமான விடயங்களிற்காக ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்வதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

துருக்கி வழங்கிய தகவலின் அடிப்படையில் பல அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டனர் அவர்கள் வழங்கிய தகவலின் படி பத்திரிகையாளரை சவுதி அரேபியாவிற்கு கொண்டுவரும் நோக்கிலேயே சவுதி அரேபியா அதிகாரிகள் துருக்கிக்கு சென்றமை தெரியவந்துள்ளது எனவும் சவுதி அரேபிய ஊடகம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளரின் மரணத்திற்கு காரணமானவர்கள் அதனை மூடிமறைத்தனர் எனவும் சவுதிஅரேபிய ஊடகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!