டிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை – ரஜினி

டிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘நான் தொடங்கவிருக்கும் கட்சியின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. ஆனால் டிசம்பர் 12 ஆம் திகதியன்று கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை.

மீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அதே சமயம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக்கூடாது,’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!