ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகவேண்டும்- சம்பிக்க ரணவக்க

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்றையை அமைச்சரவை கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தான் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான இராஜாதந்திர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய உண்மை ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் குறித்து அமைச்சரவை ஆராய்ந்த வேளையே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஏனைய தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை காரணமாக பிரிட்டன் உட்பட சில நாடுகள் விடுதலைப்புலிகளிற்கு அனுதாபமான விதத்தில் செயற்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!