188 பேருடன் கடலில் விழுந்தது இந்தோனேசிய விமானம்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானமொன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏயார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்க்கால் தீவு நோக்கி 188 பயணிகளுடன் புறப்பட்டது.

இந்நிலையில், விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13 வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால்ஈ விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டனர். 181 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், லயன் ஏயார் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!