118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றனரா?

பேர்பெட்சுவல் நிறுவனத்திடமிருந்து 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதை உறுதிசெய்யும் ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளன என முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர முன்வைத்து குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய தயார் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என தனது அலுவலகத்தின் மூலம் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றனர் என தயாசிறிஜயசேகர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதை பத்திரிகைகள் மூலம் அறிந்துகொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் தயாசிறியிடம் இது குறித்து கேட்டேன் அவர் 118 பேர் குறித்த விபரங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளது என குறிப்பிட்டார் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆராய்ந்த பின்னர் ஊடகங்களிற்கு உண்மையை தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று பொலிஸார் இது குறித்து அர்ஜூன் அலோசியசிடம் புதிய வாக்குமூலத்தை பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!