இரண்டு கால்களையும் இழந்த காதலனை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்!

ரண்டு கால்களையும் இழந்து தவித்து வந்த காதலனை இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது குறித்த தகவலை காதலனை கரம் பிடித்த பெண்ணே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் என் உயிர் நண்பனை நான் திருமணம் செய்து கொண்டேன். அதிக பொருட்செலவில் திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக அந்த பணத்தை எங்களின் வருங்காலத்துக்கு உபயோகப்படுத்தவுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

அந்த பெண்ணை திருமணம் செய்த நபர் வீல்சேரில் உட்கார்ந்திருந்ததை காண முடிந்தது. அவர் பேசிய வீடியோவில், கார் விபத்தில் என் கால்களை நான் இழந்துவிட்டேன். வீல் சேரில் உட்கார்ந்திருக்கும் நபர்கள் மனநிலையில் பிரச்சனை உள்ளதாக பலரும் நினைப்பது அபத்தமானது என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!