வடக்கில் தொடங்கியது மகிந்தவின் அதிகாரத்துவ ஆட்சி! – ஊடகவியலாளர், இளைஞர்களுக்கு மிரட்டல்

?????????????
வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொலைபேசி ஊடாக விசாரணைக்கு வருமாறு நேற்று அழைத்துள்ளார்.

கடந்த வருடம் நீங்கள் தான் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தீர்கள். இந்த வருடம் நிகழ்வு ஏற்பாடுகள் எதுவும் செய்ய கூடாது என்று ஏற்பாட்டு குழு இளைஞர்களை அவர் எச்சரித்துள்ளார். இம்முறை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாகவும் ஏற்பாட்டு குழு இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வல்வெட்டித்துறை பிரதேச ஊடகவியலாளர் ஒருவரையும் நேற்று பொலிஸ் பொறுப்பதிகாரி அழைத்து மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி அறிக்கையிட கூடாது என்றும் மிரட்டியுள்ளார். ஆட்சி மாற்றத்தை அடுத்து, படிக்கடியாக பொதுமக்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதுமான கெடுபிடிகள் வடக்கில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!