ஆறுமுகன், வடிவேல் 1000 ரூபாவை பெற்றுக் கொடுத்தால் வரவேற்க்கத்தக்கது – மனோ

முறையற்ற விதத்தில் உருவாகிய அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ள ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பார்களாயின் அது வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்க கூட்டணியின் தவைரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயக நாடு அரசியலமைப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இதுவே காலகாலமாக இடம்பெற்று வந்தது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் மற்றும் புதிய பிரதமர் தெரிவு என்பன முற்று முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது. இச்செயற்பாடு சர்வதேசத்தில் என்மை இழிவுப்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததை தொடர்ந்து இடைப்பட்ட காலத்தில் பல விடயங்கள் அரசியல் நாகரிகத்திற்கு புறம்பாக இடம் பெற்றுள்ளது பலர் பணத்திற்கும், கட்சி தாவல்கள்களுக்கும் விலைபோயுள்ளனர். முதல் நாள் தன் இனப் பெருமை மற்றும் மொழியின் பெருமை தொடர்பில் கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் வந்து பறைசாற்றியவர்கள் அடுத்த நாள் புதிய அரசாங்கத்தில் சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டமையானது வேடிக்கையாகவுள்ளது.

இவ்வாறான விடயங்களே எனக்கு அரசியல் தொடர்பில் விரக்தியினை ஏற்படுத்தியது. அதனாலே எனது உளகுமுறல்களை தனிப்பட்ட முகப்பு புத்தகத்தில் அரசியலில் விடைப்பெறும் தருணம் என்று பதிவிட்டிருந்தேன்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி பாரிய நெருக்கடியினை எதிர் கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருபோதும் கட்சி துரோகம் செய்யமாட்டேன் அவ்வாறு செய்தால் தமிழ் இனத்தினை அவமதிப்பதாகும் தொடர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு வழங்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!