எதிர்ப்புகள் வெளிப்படுகின்றமை மஹிந்தவிற்கான பயமே – சரத் வீரசேகர

சர்வதேச அமைப்புக்கள் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பயந்துகொண்டே எதிர்ப்புக்களை வெளிப்படுத்துகின்றன. இராணுவத்தினருக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எவ்விதத்திலும் இனி பாதிப்பினை ஏற்படுத்தாது என இராணுவத்தின் உரிமையினை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கடந்த மூன்று வருட காலமாக அரசாங்கம் சர்வதேசத்தின் விருப்பத்திற்கு இணங்க செயற்பட்டமையின் காரணமாக நாட்டின் இறைமை பாதிக்கப்பட்டது.

இனி அந்நிலைமை தோற்றம் பெறாது எனவும் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மனித உரிமை இராணுவத்தினருக்கு எதிராக சாட்டப்பட குற்றச்சாட்டுக்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இராணுவத்தினரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டும். இவ்விடயம்தொடர்பில் இனி சர்வதேசத்தின் நோக்கங்கள் நிறைவேறாது என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!