துமிந்த, ஐதேக முக்கிய உறுப்பினருடன் பசில் பேச்சு! – மகிந்தவுக்கு பலம் சேர்க்க முயற்சி

பசில் ராஜபக்ஷ நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவதில் மகிழ்ச்சி இல்லை என கூறிய துமிந்த திஸநாயக்க, இந்த சந்திப்பின் பின்னர் அவருடன் இணைந்து பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சியின் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனும் பசில் ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.இதன் போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு குறித்த உறுப்பினரின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அந்த சந்திப்பும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!