நியூஸிலாந்தில் 18 மாத குழந்தையை கடலிலிருந்து மீட்ட மீனவர்!

நிகழவே நிகழ முடியாத அதிசயம் என வர்ணிக்கப்படும் நிகழ்வொன்றில் பெருங்கடல் ஒன்றிலிருந்து 18 மாத குழந்தையை மீட்டு இருக்கிறார் மீனவர் ஒருவர். இந்த சம்பவமானது நியூஸிலாந்தில் நிகழ்ந்துள்ளது. நியூஸிலாந்து வடக்கு தீவு ஒன்றில் உள்ள மடாடா கடற்கரையில் கஸ் ஹட் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, கடலில் ஒரு பொருள் மிதந்து வருவதை கண்டார். முதலில் அதனை பொம்மை என கருதினார். பின்னர்தான் அது குழந்தை என அவருக்கு தெரிந்தது.

கஸ் ஹட், “முதலில் பொம்மை என்றுதான் கருதினேன். பின்னர் அதன் அருகே சென்று கைகளால் தூக்கும் வரை, குழந்தை என்று எனக்கு தெரியாது” என்கிறார். “அவன் சிறிதாக சிணுங்கினேன், அதன் பிறகே ‘இறைவா இவன் உயிருடன் இருக்கிறான்’ என்று உணர்ந்தேன்” என்கிறார். இதுல் வியப்பான விஷயம் என்னவென்றால் வழக்கமாக ஹட் மீன் பிடிக்கும் இடத்திற்கு செல்லவில்லை. வேறு இடத்திற்கு மீன் பிடிக்க சென்றார். அதனால்தான், அவரால் அன்று அந்த குழந்தையை காப்பாற்ற முடிந்தது.

அந்த குழந்தை பெற்றோர்களிடமிந்து தவறி பெருங்கடல் வரை வந்துவிட்டது. குழந்தை கடலிலிருந்து மீட்கப்பட்டது என்று தெரிந்ததும், முதலில் அந்த குழந்தையின் தாய் அச்சத்தில் கத்தினார். பின் தான் சமாதானமானார். இவர்கள் அந்த கடற்கரை பகுதியில் உள்ள முர்பி ஹாலிடே கேம்பில் தங்கி இருந்தனர்.

இந்த ஹாலிடே கேம்பின் உரிமையாளர், இதனை நிகழவே நிகழாத சம்பவம் என விவரிக்கிறார். அந்த குழந்தை இப்போது நலமாக இருப்பதாக போலீஸார் பிபிசியிடம் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!