இழப்புக்களைச் சந்தித்த மக்களுக்கு திட்டமிட்டவாறு காசோலைகள் வழங்கப்படும் – டக்ளஸ்

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் என மீள்குடியேற்றம் புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும் கிளிநொச்சியில் பகல் 10.30 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 170 பேருக்குமான இழப்பீட்டுக் காசோலைகள் 2 மணிக்கும் திட்டமிட்டபடி வழங்கி வைக்கப்படவுள்ளது.

எனவே காசோலைகளைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ள பயனாளிகள் குறித்த நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து தேவைகள் மற்றும் கோரிக்கைகளுடன் சந்திக்க வரும் மக்களையும் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!