“ட்ரம்பின் விருப்பத்திற்கிணங்கவே இராஜினாமா செய்தேன்”

அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நான்றி கூறுகின்றோம். அவரது எதிர்காலத்துக்கு எங்களின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது இராஜினாமா கடிதத்தில் செஷன்ஸ், பதவி விலகல் முடிவு எனது சொந்த முடிவு அல்ல. உங்களின் (ட்ரம்ப்பின்) வேண்டுகோளினை ஏற்றே நான் எனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கின்றேன்.

மேலும் நாட்டின் அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றிய காலத்தில் சட்டத்தை நாங்கள் நிலைநிறுத்தியுள்ளோம் அதற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

பதவி விலகிய ஜெஃப் செஷன்ஸுக்கு பதிலாக அப்பொறுப்பில் ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணயை விமர்சித்து வந்த உயர் அரசு அதிகாரியான மேத்யூ விடேகர் தற்காலிகமாக இருப்பார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் இருந்து ஜெஃப் செஷன்ஸ் தன்னை விடுவித்து கொண்ட பிறகு அவரை டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!