சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா, பிரித்தானியா தலையீடு – வாசுதேவ குற்றச்சாட்டு

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும், தலையீடு செய்வதாக, சிறிலங்காவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் சந்தித்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமது நாட்டுத் தேர்தல் மற்றும் அரசியல் முறைகளில் வேறு நாடுகள் தலையீடு செய்ததாக அண்மையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கவலை வெளியிட்டன.

இத்தகைய நிலையில் அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் சிறிலங்கா விவகாரத்தில் தலையீடு செய்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!