புவி வெப்பமயமாவதால் அழிவை தடுக்க வலியுறுத்தி கரூர் மாணவி 24 மணி நேரம் தியானம்!

கரூர் மாணவி 24 மணிநேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார், கரூர் ராமேசுவரப்பட்டி ரவீந்திரன்சங்கீதா தம்பதியரின் மகள் ரக்ஷ்னா. 6ம் வகுப்பு படித்து வரும் இவர் புவி வெப்பமயமாதலால் உலக அழிவை தடுக்கும் கோரிக்கைக்காக நேற்று கரூர் வெண்ணைமலையில் 24 மணிநேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார். பிற்பகல் 11 மணிக்கு தியானத்தை தொடங்கி இன்று 11 மணிவரை தியானம் இருக்கிறார். ஒன்னரை ஆண்டுகளில் இந்தியாவில் 135 கோடி மரங்களும், உலகில் 800 கோடி மரங்களும் உருவாக்குவதற்காக 2400 கோடி விதைப்பந்துகளை விமானம் மூலம் தூவ வேண்டும்.

பறவைகள் உண்ணும் பழம்கொட்டைகள் மூலம் பறவைகள் இயற்கையை பெருக்குவதால் உலகம் முழுவதும் பறவைகள் வேட்டையாடுவதை தடை செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தியானத்தை தொடங்கினார்.பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா பொது செயலாளர் அன்ட்டோனிய குட்ரஸ் ஆகியோரது படத்துடன் மேடையில் விதைப்பந்துகளின் நடுவே தியானத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக இந்த இரண்டு கோரிக்கைகளை வெளியிட்டு ஐநா சபை அறிக்கை விபரத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து ரக்ஷனா கூறுகையில், இந்த இரு கோரிக்கை நிறைவேறும்வரை தினமும் கரூர் தலைமை தபால்நிலையம் அருகே 5 நிமிடம் விழிப்புணர்வு தியானம் இருந்து இருவருக்கும் தபால் அனுப்புவேன். நான் இதுவரை 10லட்சம் மரக்கன்றுகளை தோட்டத்தில் வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்து இதுவரை 80ஆயிரம் கொடுத்துள்ளேன். 1600 நபர்களை கண்தானத்தில் பதிவு செய்து, 50ஆயிரம் பேருக்கு முதலுதவி பயிற்சி அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!