தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் உச்சநீதிமன்றில் மனு தாக்கல்

சிறிலங்கா நாடாளுமன்றத்தை, அதிபர் மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான, பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அடிப்படை உரிமை மீறல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட பிரகடனம் அரசியலமைப்புக்கு விரோதமானது, சட்டபூர்வமானதல்ல என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றத்துக்கு செல்லாது என்று ஆணைக்குழுவின் தலைவரான மகிந்த தேசப்பிரிய கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!