சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிக்கிறது ஜப்பான்

ஜப்பானின் நீண்டகால நட்பு நாடான சிறிலங்காவில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட அண்மைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

சட்ட நெறிமுறைகளின் ஊடாக சிறிலங்காவில் உறுதித்தன்மை தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் என்று, ஜப்பான் நம்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!