தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

அத்துடன், பொதுத் தேர்தலுக்கான செயற்பாடுகளையும், உடனடியாக இடைநிறுத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்சநீதிமன்றம், இடைக்கால தடைஉத்தரவைப் பிறப்பித்திருந்தது,

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, தாம் தேர்தல் செயற்பாடுகள் அனைத்தையும் நேற்று மாலையுடன் நிறுத்தி வைத்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு, உதவித் தேர்தல் ஆணையாளர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!