பாராளுமன்றம், அலரி மாளிகை செல்லாது பதவி விலகவுள்ள தற்காலிக பிரதமர் மஹிந்த – ஹந்துன்நெத்தி

அரசியல் வரலாற்றில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்திற்கும், அலரி மாளிகைக்கும் செல்லாமல் பதவி விலகவுள்ள ஒரே தற்காலிக பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு நிச்சயம் பாராளுமன்ற தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் அது நீதியான முறையில் இடம்பெற வேண்டும்.

இரகசியமாக பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக தெரிவுசெய்து அவரின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தினை முன்னெடுத்து செல்லும் வேளையில் திருட்டுத்தனமாக வர்த்தமானியினை தேர்தலுக்கு வெளியிட்டு பாராளுமன்ற தேர்தலினை நடத்துவதற்கு ஒருபோதும் மக்கள் விடுதலை முன்னயிணினர் ஆதரவு வழங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!