இன்று மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்போம் – ஐதேக

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் கூடும் போது, தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட ஐதேக,

“முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல், சிறிலங்கா அதிபருடனான சந்திப்பு முடிவடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் மீண்டும் நாங்கள் எமது பெரும்பான்மையை நிரூபிப்போம். என்று தெரிவித்துள்ளது.

அதேவேளை, அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று கூறப்பட்ட கூட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

“போலி பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதால், முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிக்க முனைகின்றனர்.

என்ன ஒரு அவமானம். தங்களின் அரசியல் மீட்சிக்காக சிறிலங்காவை தாழ்த்துகின்றனர். மகிந்த ராஜபக்ச வெளியேற வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட ஐதேகவின் லக்ஸ்மன் கிரியெல்ல, மீண்டும் எமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று சிறிலங்கா அதிபரிடம் கூறினோம். ஆனால் அவர் அதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!