தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு கைதிகள் மூவர் விடுதலைக்கு கண்டனம் – விஜய்காந்த்

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்று வரும் மூன்று கைதிகளை விடுதலை செய்ததற்கு தே. மு. தி. க. தலைவர் விஜய்காந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

“தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாணவிகள் பஸ்ஸில் பயணித்த போது உயிரோடு எரித்து கொலை செய்த மூன்று அ.தி.மு.க. நிர்வாகிகளை தமிழக அரசின் சிபாரிசுடன் விடுவித்த ஆளுநர் பேரறிவாளன் முருகன் நளினி உட்பட ஏழு பேரை ஏன் விடுதலை செய்யவில்லை?

ஒரு கண்ணில் சுண்ணாம்பு மறு கண்ணில் வெண்ணெய்? அ.தி.மு.க.வினர் மூன்று பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது போல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மெத்தனமாக இல்லாமல் விரைந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!