வேலூர் ஜெயிலில் ராஜீவ்காந்தி கொலை கைதி முருகன் திடீர் மவுன விரதம்

வேலூர் ஜெயிலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி முருகன் திடீரென மவுன விரதம் இருக்கிறார்.

வேலூர் ஜெயிலில் ராஜீவ்காந்தி கொலை கைதி முருகன் திடீர் மவுன விரதம்
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் முருகனின் மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கிறார். ஆன்மீகத்தில் அதிகமாக நாட்டம் கொண்ட முருகன், எப்போதும் காவி உடை அணிந்தே இருக்கிறார்.

கடந்த ஆண்டு முருகன் அறையில் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் கோர்ட்டு ஜே.எம். எண்-1ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக 29-வது முறையாக கடந்த 19-ந்தேதி முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏற்கனவே, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடித்த முருகனிடம், நீதிபதி அலிசியா சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து, வழக்கு விசாரணை 24-ந் தேதி (நாளை) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயிலில் முருகன் திடீரென மவுன விரதம் இருந்து வருகிறார். தனது மன அமைதிக்காக பேசாமல் முருகன் மவுன விரதம் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!