அந்தமான் பழங்குடியினரால் அமெரிக்கர் ஒருவர் பலி

அந்தமான் நிக்கோபார் தீவுகளில், அங்குள்ள ஆபத்தான பழங்குடியினர்களால் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.அந்த அமெரிக்கரை, மீனவர்கள் வட செனிடல் தீவிற்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த பழங்குடியினர் அவரை அம்புகளால் சுட்டு, அவரது உடலை கடற்கரையோரம் விட்டுச்சென்றுள்ளனர்.கொல்லப்பட்டவர் அலபாமாவை சேர்ந்த, 27 வயதான ஜான் ஆலன் எனபது தெரிய வந்துள்ளது.

ஆபத்தான அந்தமான் பழங்குடியினர்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

வெளியுலகில் இருக்கும் நோய்களால் அவர்களுக்கு ஆபத்து என்பதால், அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது சட்டவிரோதமானது.

கொல்லப்பட்ட ஜான் ஆலன் இந்த பழங்குடியினரை சந்தித்து அவருக்கு கிறிஸ்துவ மதம் குறித்து பிரசங்கம் செய்ய ஜான் ஆலன் விரும்பி இருக்கலாம் என்று இவரது கொலை குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாகரிகத்தில் இருந்து அப்பாற்பட்டு வாழும் செனிடல் தீவு பழங்குடியினர் 50ல் இருந்து 150 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!