அவுஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட புழுதிப் புயல்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது.

சுமார் 500 கிலோ மீற்றர் பரப்பளவுக்கு வீசிய இந்தப் புயலில் சிட்னி முதல் பல நகரங்கள் பாதிக்கப்பட்டதுடன், வானமும் செம்மஞ்சள் நிறமாக மாறிக் காணப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விமானப் போக்குவரத்தும் பாதிப்படைந்தன.

குறித்த புயலில் சிக்குண்டோர் சுவாசிப்பதில் சிரமத்தினை எதிர்கொண்டதுடன் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் விடுத்தனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், குறிப்பாக குழந்தைகளை வெளியே விடாதீர்கள், சுவாச பிரச்சினை உடைய முதியவர்களையும் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!