ரணிலை பதவி நீக்கியமைக்கான காரணத்தை வெளியிட்ட தயாசிறி

19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும், அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர, பொறுமை எல்லை மீறியதன் காரணமாகவே ஜனாதிபதி, ரணிலை பதவியிலிருந்து நீக்கினார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்படும் சபாநாயகர் சபையில் இடது பக்கம் இருப்பவர்களே ஆளுங்கட்சியினர் எனவும் அவர் நினைக்கின்றார்.

ஆகையினால் நாம் அவரை சபாநாயகராக ஏற்க மாட்டோம் என்றும் தயாசிறி ஜயசேகர இதன்போது தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வராந்தம் இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!