நீதி, நியாயத்துக்காக ‘ஜம்பர்’ அணிவதற்கும் தயார்! – சபாநாயகர்

நான் குற்றம் செய்திருந்தால் நீதி, நியாயத்துக்காக ‘ஜம்பர்’ அணிவதற்கும் தயாராகவே இருக்கின்றேன். என்மீது நம்பிக்கை இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து என்னை பதவி நீக்குங்கள் என சபாநாயகர் கரு ஜயசூரிய, தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபாநாயகர் மீதான விமர்சனம் குறித்தும் ஹன்சார்ட் அறிக்கை பொய்யாக எழுதப்படுள்ளதாகவும் ஆகவே சபாநாயகர் சிறைக்கு செல்ல வேண்டும் என ஆளும் தரப்பு குற்றம் சுமத்தும் கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் தெரிவிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!