இன்றைய ராசிப் பலன்கள் 30.12.2014

astrology1மேஷம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினரை பற்றி வெளி நபர்களிடம் குறைக் கூறி பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள்.

உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கோபப்படுவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத் தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சாத்வீகமான எண்ணங்கள் வரும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

கன்னி: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் பயனடை வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடி யும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பால் அதிகாரி யின் மனதில் இடம் பிடிப்பீர்கள். அமோக மான நாள்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார் கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர் கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழி யர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.

Tags: