ஆஸி. கப்­பல்­களை வழி­ம­றித்­தது சீனா!!

தென்­சீ­னக் கடல்­ப­ரப்­பில் ஆஸ்­தி­ரே­லி­யக் கப்­பல்­களை சீனா வழி­ம­றித்த சம்­ப­வம் பெரும் பர­ ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தென்­சீ­னக் கடல் பரப்பு முழு­வ­தை­யும் சீனா சொந்­தம் கொண்­டாடி வரு­கி­றது. இதற்கு வியட்­நாம், பிலிப்­பைன்ஸ் நாடு­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளன.

பன்­னாட்­டுத் தீர்ப்­பா­யத்­தில் இது தொடர்­பான வழக்கு நடை­பெற்று வந்­தது. அதில் தென்­சீ­னக் கடல் பரப்­பில் சீனா­வுக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு வெளி­யா­னது.

எனி­னும் இந்­தத் தீர்ப்பை புறந்­தள்ளி தென்­சீ­னக் கடல் பரப்ரை அடாத்­தாக ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளது சீனா. தென்­சீ­னக் கடல் பகுதி பன்­னாட்­டுப் போக்­கு­வ­ரத்­துக்கு உரித்­தான பகுதி என்று அமெ­ரிக்­கா­வும், ஆஸ்­தி­ரே­லி­யா­வும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

எனி­னும், குறித்த பகு­தி­யில் அவ்­வப்­போது கண்­கா­ணிப்­பில் ஈடு­ப­டு­வ­தும், அந்த வழி­யால் வரும் கப்­பல்­களை இடை­ம­றிப்­ப­தும் சீனா­வின் வழக்­க­மா­கவே மாறி­விட்­டது. அவ்­வா­றாக வியட்­நா­முக்­குச் சென்ற ஆஸ்­தி­ரே­லி­யா­வின் இரண்டு போர்க் கப்­பல் ஓர் எண்­ணெய்க் கப்­பலை சீனா நேற்­று­முன்­தி­னம் இடை­ம­றித்­தது. இதை­ய­டுத்து அந்­தப் பகு­தி­யில் சிறு பதற்­றம் ஏற்­பட்டு மறைந்­தது.

‘‘மூன்று கப்­பல்­க­ளும் பத்­தி­ர­மாக வியட்­நாம் சென்­றுள்­ளன. தென்­சீ­னக் கட­லின் பன்­னாட்டு எல்­லை­யில் ஆஸ்­தி­ரே­லிய போர்க் கப்­பல்­கள் தொடர்ந்து கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­ப­டும். எத்­த­கைய அச்­சு­றுத்­தல்­க­ளும் அஞ்ச மாட்­டோம்’’ என்று ஆஸ்­தி­ரே­லிய பாது­காப்பு அமைச்சு அறிக்கை வெளி­யிட்­டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!