பிரான்சில் கலவரம்: ‘எரிபொருள் விலை உயர்வு’ – அவசர பாதுகாப்பு கூட்டம் நடத்திய மக்ரோங்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பிரான்சில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் அவசர பாதுகாப்பு கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்.

அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என செய்திகள் வெளிவந்தநிலையில் அதுகுறித்து இந்த சந்திப்பில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

எரிபொருள் வரி உயர்த்தப்பட்டதால் பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது.வன்முறைக்கு வழிவகுத்தவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதித் துறை அமைச்சர் நிக்கோலே பெல்லுபெட் உறுதியளித்திருக்கிறார்.

ஞாயற்றுக்கிழமையன்று பாதுகாப்பு கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக பாரிசில் பாதிக்கப்பட்ட இடங்களை மக்ரோங் நேரில் பார்த்தார். சமீபத்தில் வெடித்த வன்முறையால் 23 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் நானூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!