‘‘பஸ்சில் சென்று மதுகுடிக்க பஸ் பாஸ் கொடுங்கள்’’ கலெக்டரிடம் குடிமகன் வேண்டுகோள்

ஈரோடு அருகே மதுக்கடையை திறங்கள் அல்லது பஸ்சில் சென்று மதுகுடிக்க பஸ் பாஸ் கொடுங்கள் என்று கலெக்டரிடம் குடிமகன் மனு அளித்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச்சேர்ந்த கூலி தொழிலாளியான செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேப்பம்பாளையம் அருகே மதுபானக்கடை கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது இருப்பினும் இன்னும் அந்த பகுதியில் மது கடை திறக்கப்படவில்லை.

நான் ஒரு கூலித்தொழிலாளி தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவன் தற்போது மதுகுடிக்க பத்து கிலோ மீட்டர் வரை சென்று மதுஅருந்தி வருகிறேன். இதனால் பஸ் செலவு அதிகமாகிறது. இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் மடக்கி கேஸ் போடுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கு பஸ்சில் சென்றுவர பஸ் பாஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை பார்த்த அதிகாரிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!