நியாயமான தீர்வு கிடைக்காவிடின் தமிழ் மக்கள் தமக்கான வழியைத் வகுத்துக் கொள்ள நேரிடும்! – சம்பந்தன்

ஒன்­றுபட்ட இலங்­கைக்­குள் தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்­கா­ விட்­டால் தமிழ் மக்­கள் தமக்­கான வழியை வகுத்­துக்­ கொள்­வார்­கள் என்று தமிழ்த் தேசிய கூட்ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்துள்­ளார்.

கொழும்பு தமிழ் சங்­கத்­தில் நேற்று நடை­பெற்ற- இந்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஷ்­ண­னின் ‘ஓர் இனப்­பி­ரச்­சி­னை­யும், ஓர் ஒப்­பந்­த­மும்’ என்ற நூல் அறி முக விழா­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­துக் கொண்டு கருத்­துத் தெரிவித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.

அவர் தெரி­வித்­தா­வது,’ நாட்டை பிரிப்­பது எமது நோக்­கம் அல்ல. ஒரு­மித்த நாட்­டுக்­குள் நாங்­கள் தனித்த ரீதி­யில் வாழ்ந்த பகு­தி­க­ளில் அதி­யுட்ச அதி­கூ­டிய அதி­கார பகிர்வு மூல மாக எமது உள்­ளக சுய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நாங்­கள் மரி­யா­தை­யாக, சுய மரி­யா­தை­யு­டன் கௌர­வ­மாக, மதிப்­பாக வாழ வேண்­டும் என்­பதே எங்­க­ளது கொள்கை. 1987ஆம் இலங்­கைக்கு இந்­தி­யா­வுக்­கும் இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு இந்­தி­யா­வுக்கு உள்­ளது. இந்த கட­மை­யி­லி­ருந்து இந்­தியா விலக முடி­யாது.

எமது நாட்­டுக்­குள், எமது மக்­க­ளு­டன் பேசி நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ளக் கூடிய ஒர் தீர்வை நாங்­கள் ஏற்­ப­டுத்த விரும்­பு­கின்­றோம். அதற்­கான தீர்வு கிடைக்­கா­விட்­டால். அந்த வித­மான நியா­ய­மான தீர்வு கிடைக்க எது செய்ய வேண்­டுமே, அதை செய்ய நாங்­கள் தயங்க மாட்­டோம்.- என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!