நூற்றாண்டு பாலம் நொடிப் பொழுதில் தகர்ப்பு

இந்தியாவின், மகாராஷ்டிராவில் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாலமொன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனே பகுதியில் அமைந்துள்ள இந்த பாலமானது பிரித்தனியரின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

இந்தப் பாலம் கடந்த காலங்களில் சேதமமடைந்து வந்த நிலையில், பாலத்தில் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி பாலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வெடிவைத்து பாலம் நொடிப் பொழுதில் தகர்க்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!