பொதுவெளியில் வைத்து கணவனுக்கு மனைவி கொடுத்த தண்டனை!

பீகார் மாநிலத்தில் திருமணமாகி 2 வருடங்களில் முத்தலாக் கூறிய கணவனை பொதுவெளியில் வைத்து மனைவி பளார் விடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பீகார் மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் துலாரே. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சோனியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 5 மதங்களாகவே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மனைவியை பிரிய நினைத்த துலாரே, தன்னுடைய வீட்டாரிடம் கூறியுள்ளார். அதன்படி அவர்களுடைய கிராமத்தில் ஊர்பஞ்சாயத்து கூடி, இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தது. ஆனால் துலாரே அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மூன்று முறை தலாக் என கூறுமாறு ஊரார்கள் கூறியதும், துலாரே கூற ஆரம்பித்தார் மூன்றாவது முறை அவர் கூற முற்படும்போது, நாற்காலியில் இருந்து எழுந்த சோனியா பளார் என கணவனின் கன்னத்தில் அறைந்தார். இதில் ஆத்திரம் தாங்க முடியாத துலாரே உடனடியாக மனைவியை திருப்பி தாக்க ஆரம்பித்தார். அவர்களை தடுக்க முயன்று இரு வீட்டாரும் சண்டையிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!