மைத்திரிக்கு உளநலப் பரிசோதனை – நீதிமன்றில் மனு

அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தற்போது எதிர்பாராத பக்கத்தில் இருந்து புதியதொரு சவால் எழுந்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உள நிலை தொடர்பாக கேள்வி எழுப்பி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தக்சிலா ஜெயவர்த்தன என்ற பெண் செயற்பாட்டாளர் ஒருவரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சட்டவாளர் சிசிர குமார சிறிவர்த்தன,

“அவர் நல்ல உள நிலையில் இருக்கிறாரா என்று அங்கொட மனநல மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்து பரிசோதிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா எழுதிய, ஜனாதிபதி தந்தை என்ற நூலில், “ குடும்பத்தில் உள்ள மன நலமின்மை தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

அவரது அண்மைய சர்ச்சைக்குரிய செயற்பாடுகள், அறிக்கைகள் அதற்கு விளக்கமளிக்கக் கூடும்” என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!