உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் – பிரித்தானிய தூதுவர்

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக சிறிலங்கா உச்சநீதிமன்றம் இந்தவாரம் வெளியிடப்போகும் தீர்ப்பு, வரலாற்றை உருவாக்கும் என்று பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,

“ஒரு முன்னாள் சட்ட மாணவன் என்ற வகையில் நான் , உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்.

இந்தத் தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் தீர்ப்பாக அமையும்.

சிறிலங்காவின் சட்டக்கல்லூரி மாணவர்கள் பல தலைமுறைக்கு இந்த தீர்ப்பு குறித்து கற்பார்கள்” என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!