காதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல்

இந்தியா, கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

23 வயதான வைத்தீஸ்வரன் என்பவர் கணணி அறிவியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ரத்தினபிரியா என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் தொலைபேசியில் மட்டும், பேசிவந்த இவர்கள், நாளடைவில் வெளியில் ஒன்றாக சேர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து காதலன் வந்துள்ளான்.

கடந்த 9ஆம் திகதி ரத்தினபிரியா தொலைபேசியில், நீண்ட நேரமாக வைத்தீஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த ரத்தினபிரியாவின் தாய் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரத்தினபிரியா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த வைத்தீஸ்வரன் ரத்தினபிரியாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து காதலி இறந்த வேதனையில் வைத்தீஸ்வரன் இரவு வீட்டுக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வைத்தீஸ்வரனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்தீஸ்வரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே வைத்தீஸ்வரனை மீட்டு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் வைத்தீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் சிதம்பரம் அரசு வைத்தியசாலையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவரது உடலின் பல இடங்களில் எலிகள் கடித்து குதறி இருந்தது. இதை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிந்தைமையும் குறிப்பிடதக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!