வயிற்றுக்குள் பாம்பு: – கத்தியால் வயிற்றில் குத்தி தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

துருக்கியில் தன்னுடையை வயிற்றுக்குள் பாம்பு இருப்பதாக கூறி வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் வயிற்றில் குத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kocaeli மாகாணத்தை சேர்ந்தவர் சுக்ரு (22).< இவருக்கு சில நாட்களாக மனநல பிரச்சனை இருந்த நிலையில் தனது வயிற்றில் பாம்பு இருப்பதாக குடும்பத்தாரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுக்ருவின் தாய் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்தும் அவர் வரவில்லை. பின்னர் வலுக்கட்டாயமாக மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து தனது வயிற்றில் பாம்பு இருக்கிறது என சுக்ரு அலறி துடித்துள்ளார். பின்னர் கத்தியால் தன்னை தானே குத்தி கொள்ள முயன்ற போது அவரின் தாயும், சகோதரியும் தடுத்தனர். அப்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் தனது வயிற்றில் கத்தியால் குத்தி கொண்டார் சுக்ரு. இதனால் பதறிபோன அவர் தாய் உடனடியாக சுக்ருவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!