தமிழர்களின் போராட்டத்தை புறமொதுக்கிவிட முடியாது

அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­க­ளில் அரசு தொடர்ந்­தும் பாரா­மு­க­மாக இருக்­கு­மா­யின், வடக்­குக் கிழக்­கில் அரச நிர்­வா­கத்தை முடக்­கு­வ­தற்­கான போராட்­டம் முன்­னெ­டுக்­கப்ப ­டுமென நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம். ஏ. சுமந்­தி­ரன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளமை அரசியல் அரங்கில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கூட்­ட­மைப்­புக்கு தமிழ் மக்­கள்மீது சிறி­தும் அக்­க­றை­யில்லை, அர­சு­டன் ஒட்­டி­யி­ருந்து கொண்டு சுக­போ­கத்தை அனு­ப­வித்­துக் கொண்டி­ருக்­கி­றார்­கள் என்­றெல்­லாம் கூறி­ய­வர்­கள், சுமந்­திர­னின் அறி­விப்­பை­ய­டுத்து வாய­டைத்­துப்போய் நிற்­கின்ற­னர். கூட்­ட­மைப்­பின் தற்­போ­தைய மன­நி­லை­யையே சுமந்­தி­ரன் எடுத்­துக் கூறி­யுள்­ளார்.

ஈழத்தமி­ழர்­க­ளது வாழ்க்கை இன்­ன­மும் பிரச்­சி­னை­க­ளின்
மத்­தி­யில் தான்

ஈழத் தமி­ழர்­க­ளின் வாழ்க்கை வர­லாற்­றைப் புரட்­டி­னால் அதில் ஏரா­ள­மான அத்­தி­யா­யங்­கள் அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட ஏமாற்­றங்­க­ளை­யும், அவர்­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட அநி­யா­யங்­க­ளை­யும் எடுத்­துக் கூறு­வ­ன­வா­கவே அமைந்­துள்­ளன. நாடு சுதந்­தி­ரம் அடைந்த நாளில் இருந்து இன்று வரை­யில் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில் தான் தமிழ் மக்­க­ளது வாழ்க்கை கழிந்து வரு­கின்­றது.

தந்தை செல்வா போன்ற மித­வா­தத் தலை­வர்­கள் இனி­யும் பொறுமை காக்க முடி­யாது என உணர்ந்து கொண்­ட­தால்­தான் தமி­ழர்­க­ளுக்­கான உரி­மைப் போராட்­டங்­களை அகிம்சை முறை­யில் ஆரம்­பித்­த­னர். ஆனால் இன­வா­தி­கள் இரும்­புக் கரங்­கொண்டு அவற்றை அடக்­கு­வ­தி­லேயே குறி­யா­கச் செயற்­பட்­ட­னர்.

தமது முயற்­சி­க­ளுக்கு ஏற்­பட்ட தோல்­வி­க­ளால் ஏமாற்­ற­முற்று உள­ரீ­தி­யா­கப் பாதிக்­கப்­பட்ட தந்தை செல்வா, அந்த ஏக்­கம் கலை­யாத நிலை­யில் இவ்­வு­ல­கை­விட்டு நீங்­கிச் சென்­றார். அவ­ருக்­குப் பின்­வந்த தலை­வர்­க­ளா­லும் எதை­யுமே சாதிக்க முடி­ய­வில்லை.

இனி­யும் பொறுக்க முடி­யாது என்ற நிலை­யில் தான் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தங்­க­ளைக் கைக­ளில் ஏந்­தி­னர். சுமார் முப்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நீடித்த ஆயு­தப் போராட்­டம் இந்த நாட்­டின் அடித்­த­ளத்­தையே ஆட்­டிப்­பார்த்து விட்­டது. பல ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­கள் காவு கொள்­ளப்­பட்­டன.

கணக்­கி­ட­மு­டி­யாத அள­வுக்கு பொரு­ளா­தார இழப்­புக்­கள் ஏற்­பட்­டன. மீள முடி­யாத கடன் சுமைக்­குள் நாடு தள்­ளப்­பட்­ட­மைக்கு இந்த நீண்ட போரே கார­ண­மா­கும். கடந்த 2009ஆம் ஆண்டு புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்­டமை தமி­ழர்­க­ளின் பாது­காப்­பைக் கேள்­விக் குறி­யாக மாற்­றி­விட்­டது. அது மட்­டு­மல்­லாது, எதை­யும் கேட்டு வாங்­கும் நிலைக்­குள் அவர்­களைத் தள்­ளி­விட்­டது.

தமிழ்த் தலை­வர்­கள் கேட்­டுக் கொண்­டதை நிறை­வேற்றி வைக்­கின்ற நிலை­யில் அரசு இல்­லா­த­தால், தமிழ் மக்­கள் பொறு­மை­யி­ழந்த நிலை­யில் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­வ­தைக் காண முடி­கின்­றது.

இனி­யும் பொறு­மை­காக்க இய­லாது என்ற நிலை­யில்
மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னம் இது

சுமந்­தி­ர­னின் தற்போதைய அறி­விப்பு இனி­யும் பொறுமை காக்க முடி­யாது என்ற நிலை­யில் வௌிவந்த ஒன்று என்­பதை நாம் முத­லில் புரிந்துகொள்ள வேண்­டும்.

நாட்­டின் இன்­றைய சூழ்­நிலை­ யில் தமி­ழர்­க­ள் மற்­று­மொரு போராட்­டத்­தைக் கையில் எடுப்­பது என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. அது­வும் ஆரம்­பப் புள்­ளி­யி­லி­ருந்து ஆரம்­பிப்­பது என்­பது மிக­வும் சிர­மா­ன­தொரு காரி­ய­மா­கும். கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் தீர ஆலோ­சித்­த­தன் பின்­னரே இத்­த­கை­ய­தொரு முடிவை எடுத்­தி­ருப்­பார்­க­ளென நம்­ப­லாம்.

தமி­ழர்­கள் மிக அதி­க­ள­வில் வாழ்­கின்ற தமிழ் நாட்­டி­லும் பல்­வேறு போராட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. மத்­தி­யில் ஆளு­கின்ற பா.ஜ. க அர­சுக்கு எதி­ரான போராட்­டங்­க­ளா­கவே இவற்­றைப் பார்க்க முடி­கின்­றது. இந்த நிலை­யில் ஈழத் தமி­ழர்­க­ளும் போராட்­டத்­தில் மீண்­டும் குறிப்­பது குறித்­துச் சிந்­திப்­பது இந்­திய, இலங்கை அர­சு­க­ளுக்கு உவப்­பா­ன­தாக இருக்­கப்­போ­வ­தில்லை.

தந்தை செல்­வா­வின் தலை­மை­யி­லும் அரச நிர்­வா­கத்தை முடக்­கும் பொருட்டு மாவட்­டச் செய­ல­கங்களுக்கு முன்­பாக மறி­யல் போராட்­டங்­கள் இடம்­பெற்­றன. அவற்­றில் தமிழ் மக்­கள் ஆர்­வத்­து­டன் கலந்து கொண்­ட­தை­யும் காண­மு­டிந்­தது. ஆனால் அப்­போ­தைய அரசு, மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­புக் கொடுக்­க­வில்லை. அந்த அகிம்சை வழிப் போராட்­டங்­க­ளும் அடக்கி ஒடுக்­கப்­பட்­டன.

போருக்­குப் பின்­ன­ரான காலத்தில் தீர்­வுக்­கான முயற்சி எது­வும் எடுக்கப்படவில்லை

போர் ஓய்ந்த பின்­ன­ரும் அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டாமை தவ­றான தொரு முடிவு ஆகும். பேரி­ன­வா­தத் தரப்­பி­னர் தமி­ழர்­க­ளைக் கிள்­ளுக்கீரை­யாக மதிக்­கின்ற மனப்­பான்­மை­யையே இது எடுத்­துக் காட்­டு­கின்­றது. இனி­யும் பொறுக்க முடி­யாது என்ற நிலை­யில் தமி­ழர்­கள் போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­வதை பன்­னாட்­டுச் சமூ­கம் ஏற்­றுக்­கொள்­ளவே செய்­யும்.

ஏற்­க­னவே இலங்கை மீது அதி­ருப்­தி­யில் உள்­ள­தால், ஆயு­தம் ஏந்­தாத அகிம்­சைப் போராட்­டம் பன்­னாட்­டுத் தரப்­பு­க­ளால் ஏற்­றுக் கொள்­ளப்படத்தக்க சூழ்­நிலை உரு­வா­கவே செய்­யும்.
தமிழ்த் தலை­வர்­கள் தரப்­பி­னர் கட்சி பேதங்­களை மறந்து கூட்­ட­மைப்­பின் தலை­மை­யில் இடம் பெறு­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருக்­கும் போராட்­டத்­துக்கு ஆத­ரவை வழங்க வேண்­டும்.

தமி­ழர்­கள் அனை­வ­ரும் ஒரே குடை­யின் கீழ் ஒன்று திர­ளும்போது அதற்­குத் தனி­யா­ன­தொரு மதிப்பு ஏற்­பட்­டு­வி­டும். இத­னால் எமது தமிழ்த் தலை­மை­கள் பத­வி­க­ளுக்­கா­கச் சண்­டை­யி­டு­வதை விடுத்து உரி­மைக்­கான போராட்­டத்­தில் ஈடு­பட்­டுத் தமி­ழர்­க­ளின் பலத்தை உல­கறி­யச் செய்ய வேண்­டும்.

இதே­வேளை ஆளும் தரப்­பி­ன­ரும் இன­வா­தி­க­ளும் இனி­யும் தமி­ழர்­க­ளைக் குறை­வாக எடை போடு­வார்­க­ளா­யின் அதுவே அவர்­க­ளுக்கு வினை­யாக முடிந்­து­வி­டும். இந்த நாட்­டின் அர­சி­யல் தீர்வு நீண்ட கால­மா­கவே இழு­ப­றி­யான நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

இதன் கார­ண­மாக பல அனர்த்­தங்­க­ளை­யும் நாம் எதிர் கொண்­டு­விட்­டோம். தமி­ழர்­கள் இதற்­காக மீண்­டும் போரா­டியே ஆக­வேண்­டும் என்­றால் அதில் நியா­யம் இருப்­பதை ஏற்­றுக்­கொண்­டு­தான் ஆக­வேண்­டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!