27,000 வில்லைகளாக வெட்டுவதற்காக தனது உடலை தானமாக கொடுத்த ஜேர்மனியப் பெண்!

ஜேர்மானியப் பெண் ஒருவர் மருத்துவ மாணவர்களுக்காக தனது உடலை 27,000 வில்லைகளாக வெட்டுவதற்காக தானமாக கொடுத்துள்ளார். ஜேர்மனியில் பிறந்த Susan Potter என்கிற Sue இரண்டாம் உலகப்போருக்குப்பின் நியூயார்க்குக்கு குடிபெயர்ந்தார், Harry Potter என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

Sueக்கு பல பிரச்சினைகள் இருந்தன, நீரிழிவு, தோல் புற்றுநோய், மார்பக புற்று நோய் மற்றும் பல அறுவை சிகிச்சைகளுக்கு ஆளானார் அவர். 2000ஆம் ஆண்டு, தான் இனி மிஞ்சிப்போனால் ஓராண்டு வாழ்வேன் என்று எண்ணிய Sue, கொலராடோ பல்கலைக்கழகத்தில், இருவர், இறந்தபின் அவர்களது உடல்களை உறையச் செய்து வில்லைகளாக்கி (Thin slices) அவை மருத்துவ மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு உதவியாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக படித்தார். அவ்வாறு உறைய வைக்கப்பட்டு வில்லைகளாக்கப்படும் மூன்றாவது நபராக தான் இருக்கவேண்டும் என்று ஆசைபட்டார் Sue.

ஆனால், அடுத்த ஆண்டே இறந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட Sue அடுத்த 15 ஆண்டுகள் வாழ்ந்தார். அந்த 15 ஆண்டுகளும் தன் உடலில் நடந்த, தான் எதிர்கொண்ட ஒவ்வொரு விடயத்தையும் ஆவணங்களாக பதிவு செய்தார். Sueக்கு தன் உடலை கல்விக்காக அர்ப்பணிப்பதில் இருந்த ஆர்வத்தைக் கண்ட, அவருக்கு உதவியாக இருந்த Dr Spitzer, அவரது உடற் செயலியலை படிப்பது அல்ல அது, அவரது மனிதநேயத்தை கற்றல் என்கிறார். தான் இறந்தபின் தன் உடலைக் கற்றுக் கொள்ள இருக்கும் மாணவ மாணவிகளை சந்திப்பதில் அவ்வளவு பிரியம் அவருக்கு.

அதனால்தான் அவரது நினைவு நாளின்போது அவ்வளவு மாணவர்கள் கண்ணீர் விட்டார்கள். தான் இறக்கும் முன்னரே, தான் வெட்டப்படும் அறை ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இனிய இசை அறையில் ஒலிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அவரது ஆசைப்படியே அவரது உடல் உறையச் செய்யப்பட்டு வில்லைகளாக்கப்பட்டது. Susan Potter இறந்து 24 ஆண்டுகளுக்குப்பின் அவர் 60 நாட்களில் 27,000 வில்லைகளாக்கப்பட்டார் என்கிறார் Dr Spitzer.தொடர்ந்து அவரது உடல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஒரு நாள் அவரது ஆசைப்படியே Susan Potterஇன் உடலை மருத்துவ மாணவர்கள் தங்கள் பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!